டெல்லி: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு முக்கிய மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் அரசு மீண்டும் நீரிழிவு, தொற்று, செரிமானக் கோளாறுகள் மற்றும் வலி நிவாரணத்திற்கான மருந்துகளை மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் வகையில் 39க்கும் அதிகமான மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சந்தையைப் பொருந்த வரை இந்த மருந்துகளின் வர்த்தக மதிப்பு மட்டும் 1,054 கோடி ரூபாய்ய இதன் விலை மத்திய அரசு 5 - 40 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேசிய மருந்து விலை ஆணையம் தனது இணையத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் 652 மருந்து வகைகள் விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவித்துள்ள 39 மருந்து வகைகள் பன்னாட்டு நிறுவனங்களான அப்பாட், கிளாசோஸ்மித்கிளைன் மற்றும் இந்திய நிறுவனங்களான லூபின்,காடிலா ஹெல்த்கேர், ஐபிசிஏ மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தயாரிக்கப்படுபவை.


Click it and Unblock the Notifications