2030ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி அளவு 8 டிரில்லியன் டாலராக உயரும்!
டெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 8 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என மத்திய அரசின் புதிய அமைப்பான நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

இந்தியாவில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே இந்த இலக்கை இந்தியா எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது எனவு கூறினார்.
தற்போதைய நிலையில் நாட்டின் ஜிடிபி அளவு 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் கணிப்புகளின் படி அடுத்த 15 ஆண்டுகளில் இதன் அளவு நான்கு மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications