டெல்லி: இந்திய ரயில்வே துறையில் முதலீடு அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என ரியல்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்களை விரிவுபடுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என அவர் கூறினார்.

மேலும் அவர் இந்திய ரயில்வே துறையைச் சீனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார் இதில், சீனாவைப் பார்க்கும்போது அந்நாட்டு ரயில்வே போக்குவரத்தில் அதிக முதலீடுகளைச் செய்தது, அதிகளவிலான நகரங்களை இணைத்ததுள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குவது நெருக்கடி தான்.
இப்பிரச்சனையைக் களைய இரு வழிப்பாதை மற்றும் மூன்று வழிப்பாதை அமைக்க வேண்டும் எனவும் தனது தீர்வை முன்வைத்தார். இதற்கு அதிக முதலீடுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications