பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆனந்த் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்நிறுவனத்தின் சீஇஓ-வாக ஆனந்த் நாராயணன் செயல்பட உள்ளார்.

இந்நிறுவனத்தின் தற்போதைய நிறுவனர் மற்றும் சீஇஓ-வான முகேஷ் பன்சால், பிளிப்கார்ட் நிறுவன இயக்குநர் குழு தலைவராக இணைய உள்ளார்.
ஆனந்த் நாராயணன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். கடந்த 15 வருடங்களாக மெக்கென்ஸி நிறுவனத்தின் சிகாகோ, ஷாங்காய், தைபே மற்றும் சென்னை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல்மிந்திரா நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் தனது பணிகளை துவங்க உள்ளார்.
2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 40 வயதுக்குள் இருக்கும் 40 சிறந்த பிஸினஸ் தலைவர்கள் பட்டியலில் நாராயணனும் ஒருவர். மெக்கென்ஸி நிறுவனத்தின் புராடக்ட் மேம்பாடு பிரிவில் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர்.


Click it and Unblock the Notifications