மும்பை: மத்திய அரசு இந்திய நிதித்துறையை மேம்படுத்தும் பொருட்டுப் பல கசப்பான முடிவுகள் எடுத்துள்ளது. மத்திய அரசின் இம்முயற்சிக்குப் பல தரப்பட்ட கருந்துக்கள் நிலவி வருகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புதிய திருத்தப்பட்ட இந்திய நிதி சட்டத்தின் (ஐஎப்சி) வரைவுகளில் ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் பல முயற்சிகள் அடங்கியுள்ளது.
7 பேர் கொண்ட குழு!
புதிய வரைவுகளின் படி நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் அனைத்து அதிகாரம் மிக்கக் குழுக்களிலும் அரசின் சார்பாக நான்கு நபர்களும், ரிசர்வ் வங்கியின் சார்பில் 3 நபர்கள் மட்டும் இருக்கும் வரையில் திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து முடிவுகளில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும்.
ஆர்பிஐ கவர்னர்
ஆர்பிஐ மூவர் குழுவில் அதன் ரிசர்வ் வங்கியின் கவர்னரும் அடங்குவார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் என்னும் பதவியை ரிசர்வ் வங்கியின் தலைவர் என மாற்றவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கை குழு
நாட்டின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதக் கொள்கையை நிர்ணயம் செய்யும் நாணயக் கொள்கை குழுவிலும் புதிய ஐஎப்சி திருத்தப்பட்ட பரிந்துரை செயல்பட உள்ளது.
புதிய மாற்றம்
ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும் பணவீக்க இலக்கை ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் படி மத்திய அரசு வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8
மத்திய அரசின் இப்புதிய திருத்தங்கள் குறித்த கருத்துகள் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை வெளியிடலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பிளாஷ்பேக்!
கடந்த ஒரு வார்த்தில் வர்த்தக சந்தையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் ஒரு


Click it and Unblock the Notifications