லாபத்தில் 19% உயர்வு... கொண்டாட்டத்தில் ஆக்சிஸ் வங்கி!
மும்பை: இந்திய தனியார் வங்கியியல் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஆக்சிஸ் வங்கி ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 19% நிகர லாப உயர்வைக் கண்டுள்ளது.
மேலும் இக்காலகட்டத்தில் ஆக்சிஸ் வங்கி லாபம் 1,978 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இதன் அளவு ரூ.1,666 கோடியாக உள்ளது.

இக்காலகட்டத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாய் அளவு 12,234 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் வட்டி வருமானம் 9,936 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு 1.38 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications