ரூ.6,318 கோடி லாபம் கண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!
மும்பை: நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் 30ஆம் தேதி முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ.6,318 கோடியாக அதிகரித்துள்ளது.
(முகேஷ் அம்பானி பற்றிய செய்திகள்)
இக்குழும நிறுவனங்களில் அதிக லாபம் தரும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு பிரிவின் லாப அளவு கடந்த ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இந்நிறுவனத்தின் நிகரலாபம் 5,957 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முடிந்த காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 6,243 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
(அனில் அம்பானி பற்றிய செய்திகள்)
மேலும் இக்காலண்டில் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருவாய் அளவு 17 சதவீதம் அதிகரித்து 65,817 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications