மும்பை: நாட்டின் முன்னணி பயோ பார்மா நிறுவனமான சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் திங்கட்கிழமை 2.2 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 550 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
சில வாரங்களுக்கு முன் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்நிறுவனம் பொது விநியோகத்திற்காகத் தனது 2.2 கோடி பங்குகளைச் சந்தையில் வெளியிட்டுள்ளது.
இப்பங்குகளைச் சைன்ஜீன் நிறுவனம் 250 ரூபாய் என்ற விலையில் தனது விற்பனையை துவங்கியுள்ளது. இவ்விற்பனை வருகிற ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில் சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பயோகான் தனது 11 சதவீத பங்குகளை விற்பனை செய்து பங்கு இருப்பு அளவை 85.5% இருந்து 74.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
பங்குச்சந்தையில் இறங்கியதன் மூலம் சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பொதுப் நிறுவன பங்குகளின் அளவு 14.5 சதவீதத்தில் இருந்து 25.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications

