இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முதல் முறையாக வருமானவரி செலுத்தும் நபர் அல்லது இணையம் வழியாக முதல் முறை வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரி தளத்தில் பரிமாற்றம் அல்லது புதுப்பிக்கும் முன் இத்தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

 

வருமானவரி என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டு வருமானத்தைப் பொறுத்து அரசிற்குச் செலுத்துவதாகும். வருமானவரி வருமானம் ஈட்டும் திறனைப் பொறுத்து தனிநபர்களுக்கு மாறுபடும்.

இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

எனினும், வருமான வரித்துறை மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்குப் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வருமானவரி தளத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஃபலோ செய்தால் இணையதளத்தில் எளிதாக வருமான வரியைச் செலுத்தி விடலாம்.

(இதுல கூட வருமான வரியை சேமிக்கலாமா?? வெரைட்டியான ஐடியா..)

படி 1 - வருமானவரி தளத்திற்குச் செல்லவும்.
படி 2 - ரெஜிஸ்டர் யுவர்ஸெல்ப் என்பதை க்ளிக் செய்யவும்.
படி 3 - இன்டிவிஜுவல் என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4 - நிரந்தரக் கணக்கு எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்ற விவரங்களை வழங்கவும்
படி 5 - பாதுகாப்பு கேள்விக்குப் பதிலளிக்கவும்.
படி 6 - தொடர்க என்பதை க்ளிக் செய்யவும்.
படி 7 - கடவுச்சொல் மற்றும் தொடர்பு விபரங்களை அளிக்கவும்.
படி 8 - பதிவு செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு மின்னஞ்சல் மற்றும் செயல்படுத்தும் அமைப்பு அனுப்பி வைக்கப்படும்.
படி 9 - பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதி பயன்படுத்தி உள்ளே நுழையவும்.

ஒரு முறை நீங்கள் பதிவு செய்த பின்னர்ப் பணத்தைத் திரும்பப் பெறும் நிலை, கோப்புத் திருத்தம், மின் தாக்கல் வருமான வரி போன்ற சேவைகளைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Register at Income Tax Site for e-filing purpose?

Are you first time tax payers or first time you doing e-filing. Dont panic here is step by step guide to register yourself at Income Tax Site.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X