டெல்லி: இந்தியாவில் அன்னிய செலவாணி மோசடிகள் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இக்குழுவின் ஆய்வு அறிக்கையைக் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை பங்குச்சந்தை வரத்தகத் துவக்கத்திலேயே சந்தை சரிவை சந்தித்து, பின் சீன வர்த்தகத் தாக்கத்தினால் 550 புள்ளிகள் வரை சரிந்தது.
கேமேன் தீவு
சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுவது, கேமேன் தீவு என்னும் பகுதியிலிருந்து சுமார் ரூ.85,000 கோடி பார்டிசிபேட்டரி நோட்ஸ் (பி நோட்ஸ்) மூலம் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதை இக்குழு கண்டுபிடித்துள்ளது.
54 ஆயிரம் மக்கள் தொகை
ஆனால் இத்தீவின் மொத்த மக்கள் தொகையே 2010-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி 54 ஆயிரம் தான்.
பி-நோட்ஸ்
மேலும் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையில் பங்குச் சந்தை மூலமாக நடைபெறும் அந்நிய செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்த பி-நோட்ஸ் எனப் படும் பரிவர்த்தனையில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தையில் சந்தேகப்படும்படியான உயர்வு ஏற்படும் போது அதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இச்சிறப்பு குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
பார்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஆதாயமடையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் என்பதைச் செபி கண்டுபிடிக்க வேண்டும்.
9 பரிந்துரைகள்
உச்ச நீதிமன்றம் அமைத்த இக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் செயலபட்டு வருகிறது. இக்குழு சமர்ப்பித்த இவ்வறிக்கையில் மொத்தம் 9 பரிந்துரைகளை உள்ளது.
அருண் ஜேட்லி
இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், சிறப்பு விசாரணை குழு அளித்துள்ள பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற முடியாது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பே இதனைச் சரிவர அமல்படுத்த முடியும் என ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications