261 கோடி ரூபாய் லாபத்துடன் டாபர் இந்தியா!
மும்பை: எப்எம்சிஜி துறையில் நீங்கா இடம் பிடித்த டாபர் நிறுவனம். 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 261 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது.
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 24 சதவீதம் உயர்ந்து 261 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 210 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில் 1,868 கோடி ரூபாயாக இருந்தத மொத்த வருவாய் தற்போது ரூ.2,069 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டாபர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 0.71 சதவீதம் அதிகரித்து 292.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications