காப்பி அடிப்பதில் 'பிளிப்கார்ட்' தான் பெரிய ஆளு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய சந்தையில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சரக்குத் தீர்ந்தது போலத் தெரிகிறது.

 

இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவன திட்டங்களைத் தொடர்ந்து காப்பி அடித்துச் சந்தையில் நிலைத்திருக்கத் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் மளிகை கடை

ஆன்லைன் மளிகை கடை

சில நாட்டுகளுக்கு முன்னரே அமேசான் நிறுவனத்தின் கிரானா நவ் என்னும் திட்டத்தை அப்படியே காப்பி அடித்து 'எப் கூவிக்' என்னும் திட்டத்தை வெற்றிக் கரமாக நிறுவி சோதனை நடத்தி வருகிறது.

அமேசானுக்குப் போட்டியாகப் பிளிப்கார்டின் புதிய சேவை, 'எப் கூவிக்'!

20 கடைகள்

20 கடைகள்

தற்போது இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் 20 கடைகளை நிறுவியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களைத் தங்களின் வசதிக்கு ஏற்றார் போல் இக்கடைகளில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

இதே பார்முலாவை அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது.

கடைகள் மூலம் என்ன பலன்?
 

கடைகள் மூலம் என்ன பலன்?

இக்கடைகளின் மூலம் வாடிக்கையாளர், நேரடி டெலிவரியை தவறவிட்டால் இக்கடைகளில் வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் முக்கியக் கட்டகளுக்குள் டெலிவரி ஆட்களை அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தகைய பிரச்சனைகளைக் களையவே இக்கடை நிறுவப்பட்டுள்ளது.

டெல்லி முதல் வேலூர் வரை

டெல்லி முதல் வேலூர் வரை

பெங்களூரு, மைசூர், அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, புனே, வேலூர், கூர்கான், வரோரா மற்றும் சூரத் ஆகிய பகுதிகளில் இக்கடைகள் நிறுவனப்பட்டுள்ளளது.

100 கடை இலக்கு

100 கடை இலக்கு

இந்நிலையில் இக்கிடைகளில் இன்ஸ்டன் ரிட்டன், ஸ்பாட் டிரைல்ஸ், ஒப்பன் பாக்ஸ் டெலிவரி மற்றும் புதிய பொருட்களின் டெமோ போன்ற பிற முக்கியச் சேவைகளையும் அளிக்க உள்ளதாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி சேவை பிரிவின் உயர் அதிகாரி நீராஜ் அகர்வால் தெரிவித்தார்.

மார்ச் 2016ஆம் ஆண்டுக்குள் இக்கடைகளின் எண்ணிக்கையை 100ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அமேசான்

அமேசான்

இந்நிறுவனம் முழுமையான கடைகள் என்ற ஒன்றை அமைக்காவிட்டாலும், பல இடங்களில் (மளிகை கடைகள் முதல் பெட்ரோல் பங்க்) லாக்கர்களை வைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தங்களது பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பட்டி, டிங்கரிங்

பட்டி, டிங்கரிங்

இத்தகைய சேவையைத் தான் பிளிப்கார்ட் நிறுவனம் பட்டி, டிங்கரிங் பார்த்து முழுமையான கடைகளாக அறிவித்துள்ளது.

முதலீடும் விரிவாக்கமும்..

முதலீடும் விரிவாக்கமும்..

மேலும் அமேசான் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் வரிவாக்க பணிகளைக் கண்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிர்ந்துள்ளது. இதில் பிளிப்கார்ட் மட்டும் என்ன விதிவிலக்கா?

 பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் நாட்டின் பிரபலாமான அன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பேப்பர்னிஷ், பெப்பர்பிரை, கார்ட்லேன், லென்ஸகார்ட் மற்றும் பி முக்கிய நிறுவனங்களும் நாட்டின் பல பகுதிகளில் கடைகளைத் திறந்துள்ளனர்.

நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர் டா!!

நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர் டா!!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் அகியோர் தங்களது கல்லூரி படிப்பை முடித்து விட்டு அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தனர்.

அங்கே தான் அவர்கள் ஆன்லைன் வர்த்தகம் பற்றி முழுமையாகக் கற்றுக்கொண்டனர்(ஸ்கூல்). பின்பு 2007ஆம் ஆண்டு இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தைத் துவங்கினர்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart launches 20 stores across India

India’s largest e-commerce firm, Flipkart, has launched 20 stores in 10 cities to let its customers collect the items they ordered online at their convenience, mimicking similar moves from Amazon.com Inc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X