டெல்லி: இந்தியாவில் சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் மூடி சூடா மன்னனாகத் திகழும் ஐடிசி நிறுவனத்தில் 40 உயர் மற்றும் நடுநிலை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிறுவனம் சிகரெட் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் நுகர்வோர் பொருட்கள் சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
பணி நீக்கம்
வருவாய் கணக்கெடுப்பில் நிறுவனத்திற்குத் திருப்தியான செயல்பாட்டை அளிக்காத 40 உயர் மற்றும் நடுநிலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐடிசி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
வருவாய் பாதிப்பு
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய சந்தையில் சிகரெட் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளதால், இந்நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனம் சுமார் 3 சதவீதம் வரை சரிந்தது.
ஐடிசி
இதுகுறித்த கேள்விகளுக்கு ஐடிசி நிறுவனம் உறுதி அளித்தாலும், எந்தத் துறை, பிரிவு, பெயர் பட்டியல் போன்ற விபரங்களை அளிக்க மறுத்துவிட்டது.
எதற்காக இந்தப் பணிநீக்கம்..
ஐடிசி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் செயல்திறனை பதிப்பிடும். ஆனால் இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
புதிய பணியாளர்கள்
இதுகுறித்து ஐடிசி நிறுவனம் கூறுகையில், இத்தகைய ஆய்வின் மூலம் நிர்வாகம் கவனிக்க வேண்டிய முக்கியத் துறைகளைக் கண்டறிந்ததாகவும், புதிய மற்றும் திறமையான பணியாளர்கள் தேவைப்படும் இடத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோகோ கோலா
உலகின் முன்னணி கோலா விற்பனை நிறுவனமான கோகோ கோலா தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 5 சதவீத பணியாளர்களைச் செலவீண குறைப்பிற்காகப் பணி நீக்கம் செய்தது. இதன் பின் ஐடிசி நிறுவனத்தின் இந்த முடிவை எடுத்துள்ளது.
சிகரெட் விற்பனை
ஐடிசி நிறுவனத்தின் 70 சதவீத லாபம் சிகரெட் விற்பனையில் இருந்து தான் கிடைக்கிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இதன் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளதால் ஐடிசி நிறுவனம் கடுமையான வருவாய் சிக்கலில் தவித்து வருகிறது.
அரசு விளம்பரம் வேலை செய்கிறதா?
மத்திய அரசு இந்தியாவில் தற்போது சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க இதன் மீதான வரியை உயர்த்தியும், பல வழிகளில் புகை பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க விளம்பரம் செய்தது. இதனால் காரணமாகக் கூட விற்பனை குறைந்திருக்கலாம்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications