டெல்லி: நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி மீதான தடை, இந்நிறுவனத்தின் விற்பனையை 20 சதவீதம் பாதித்துள்ளது. இதனால் 30 வருடங்களுக்குப் பின் இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தள்ளதாத நெஸ்லே தெரிவித்துள்ளது.
நெஸ்லே
சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே இன்று 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டது, இதில் ஜூன் 30 வரை முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் 64 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
288 கோடி ரூபாய்
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 288 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது.
மேகி விற்பனை
இந்நிறுவனத்தின் 25 சதவீத வருமானம் மேகி விற்பனையின் மூலம் கிடைத்தது. தற்போது இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகளவிலான சரிவைத் தழுவியுள்ளது.
விற்பனை
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு 20.6 சதவீதம் குறைந்து 1,776 கோடி ரூபாயாக உள்ளது.
வருவாய்
இந்நிலையில் மொத்த வருவாய் அளவும் 12.7 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications