டெல்லி: மத்திய அரசு கடந்த புதன்கிழமை இந்திய சந்தையில் 981 கோடி மதிப்பிலான சுமார் 7 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஹேத்வே கேபில் மற்றும் டேட்டாகாம் நிறுவன திட்டமும் அடக்கம்.
இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு துறைகளில் பல வழிகளில் அன்னிய முதலீட்டை ஈர்த்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அன்னிய முதலீட்டைப் பெறுவதற்காக நிதியமைச்சகத்திடம் விண்ணப்பம் அளித்த பல நிறுவனங்களில் மத்திய அரசின் ஆய்விற்குப் பின் ரூ.981.15 கோடி மதிப்பிலான 7 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்குப் பல்வேறு நிறுவனங்களில் 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் (FIPB) அளித்த பரிந்துரைகளின்படி நிதியமைச்சகம் இந்த அனுமதியை அளித்துள்ளது. மேலும் பல நிறுவனங்களுக்கு அன்னிய நேரடி முதலீடு அனுமதி மற்றும் வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications