பெட்ரோல், டீசல் மீதான வரியில் ரூ.75,441 கோடி ரூபாய் வருவாய்!
டெல்லி: 2015ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியில், மத்திய அரசு சுமார் 75,441 கோடி ரூபாய் வரியை வசூல் செய்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் தற்போது இதன் அளவு 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
2014-15 நிதியாண்டிற்கான வரி வசூல் விபரங்களை மத்திய நிதித்துறை அமைச்சரான ஜெயந்தி சின்ஹா வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

2013-14ஆம் ஆண்டில் இதன் அளவு 50,222 கோடியாகவும், 2012-13ஆம் ஆண்டில் 46,926 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி வசூலில் மத்திய சுங்க மற்றும் கலால் வரி வருவாயும் அடக்கம். கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலைகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications