டெல்லி: இந்தியாவில் 4வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல், ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த தனது 4வது காலாண்டு முடிவுகளைத் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டது.
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 16.1 சதவீத உயர்வுடன் 9,777 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
2.8% சரிவு...
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 16 சதவீதம் அதிகரித்தாலும், லாபத்தில் 2.8 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவு 1,783 கோடி ரூபாயாக உள்ளது.
வருடாந்திர முடிவுகள்
ஹெச்சிஎல் நிறுவனம் தற்போது 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளதால், இதனுடன் தனது வருடாந்திர முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 12.6 சதவீதம் அதிகரித்து 37,061 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 13.9 சதவீதம் உயர்ந்து 7,254 கோடி ரூபாயாக உள்ளது.
டாலர் வருவாய்
ஒரு வருட காலத்தில் இந்நிறுவனத்தின் டாலர் வருமானம் 12.2 சதவீதம் உயர்ந்து 1,164 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
முக்கியத் துறைகள்
இந்நிறுவனத்தின் இன்பராஸ்டக்சர் பிரிவின் வருமானம் 2 பில்லியன் டாலராகவும், இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி பிரிவின் வருவாய் 1 பில்லியன் டாலராகவும், நிதி சேவை பிரிவின் வருவாய் 1.5 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
ஈவுத்தொகை
மேலும் இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 5 ரூபாய் ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்களே வோண்டாம்..
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications