ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கினால் 5 வருடத்தில் நீங்களும் பில்லியனர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான புதிய பில்லியனர்களும், கற்பனையிலும் எட்ட முடியாத மில்லியனர்களும் உருவாகும் சூழல்நிலை உள்ளது, இதற்கு முக்கியக் காரணம் 'ஸ்டார்ட் அப்'.

 

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஸ்டார்ட்அப் (துவக்க நிறுவனம்) கலாச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிலும் ஈகாமர்ஸ், நிதி சேவை மற்றும் பிற தொழில்நுட்ப சார்ந்த துறைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனால் இந்தியாவில் புதிய பில்லியனர் மற்றும் மில்லியனர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர உள்ளதாக அசோசாம் தெரிவித்துள்ளது. (அப்போ அடுத்த 5 வருடத்தில் தெருவிற்கு ஒரு மில்லியனர், ஊருக்கு ஒரு பில்லியனர் இருப்பார்களா)

ஆசியாவில் இந்தியா தான் பெஸ்ட்!

ஆசியாவில் இந்தியா தான் பெஸ்ட்!

ஆசியாவில், சீனா மற்றும் தென் ஆசிய சந்தைகளில் இந்தியா தான் ஸ்டாட்அப் நிறுவனங்களைத் துவங்க சிறந்த இடங்களாகக் கருதப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு முக்கியக் காரணம், சீனாவில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் இந்தியா சந்தையில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த 5 வருடங்களில் ஸ்டாட்அப் நிறுவன முதலீடு 3 மடங்கு உயர உள்ளது.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

இத்தகைய நிலையில் இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் ஈகாமர்ஸ், இசை மற்றும் பொழுதுபோக்கு, பேமென்ட் கேட்வே மற்றும் நகரப் போக்குவரத்து, குறிப்பாக ஆன்லைன் டாக்ஸி ஆகிய துறைகள் மிகவும் வேகமாக வளரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டும் தானா??
 

இவை மட்டும் தானா??

மளிகை சாமன், பேஷன், எலக்ட்ரானிக், ஆன்லைன் உணவு போன்ற துறையில் ஈட்டுப்பட்டுள்ள நிறுவனங்களும் அதிகளவிலான லாபத்தைப் பெற உள்ளதாகவும் சந்தை நிலவரம் கூறுகிறது.

மில்லியனர்களும், பில்லியனர்களும்..

மில்லியனர்களும், பில்லியனர்களும்..

இந்தச் சூழ்நிலையில், வளர்ந்து வரும் துறைகளில் ஈட்டுப்பட்டுள்ள ஸ்டாட்அப் எனப்படும் துவக்க நிறுவனங்கள் அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது.

இதனால் இந்நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வருவாயை எளிதாகப் பெற முடியும் என அசோசாம் தெரிவித்துள்ளது.

சட்டதிட்டஙகள்

சட்டதிட்டஙகள்

இந்தியாவில் ஸ்டாட்அப் நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் சட்டதிட்டங்களும், செபி தற்போது எளிமையாக்கி உள்ளது. இதனால் புதிய நிறுவனங்கள் இந்தியாவில் எவ்விதமான தடையும் இன்றித் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

ஜூக்கர்பெர்க் போல ஆக வேண்டுமா?? அப்போ கார்ப்பரேட் வேலை வோண்டாம்..

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to produce at least dozen billionaires among start-ups by 2020

India is expected to produce at least a score of billionaires and many times millionaires among the start-ups in the next five years an Assocham study on start-ups has pointed out.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X