ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியாவின் முன்னணி பிஸ்கேட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது உற்பத்தியை அதிகரிக்கவும், செலவீனத்தைக் குறைக்கவும் தமிழ்நாட்டில் ஈரோடு, கர்நாடகத்தில் பெங்களூரு பகுதியில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய தொழிற்சாலைகள் 250 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ளதாகப் பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வருண் பெர்ரி தெரிவித்தார்.

டிசம்பரில் துவக்கம்...

டிசம்பரில் துவக்கம்...

2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இரு நிறுவனங்களும் முழுமையாக இயங்க துவங்கும் என வருண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

இந்நிறுவனம் தனது தயாரிப்பை இனி சொந்த தொழிற்சாலைகளிலேயே செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் சில தயாரிப்புகளைச் சொந்த தொழிற்சாலையிலும், கூட்டணி நிறுவனத்தில் சில தொழில்நுட்ப உதவியுடன் பிரிட்டானியா செய்து வருகிறது.

பிரிட்டானியா

பிரிட்டானியா

இந்நிறுவனம் பிஸ்கேட் மட்டும் அல்லாமல், வர்க்கி மற்றும் கேக்குகளைச் செய்து வருகிறது. ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு இரண்டு இலக்கத்தில் இருந்தது.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

இந்தியாவில் பிரிட்டானியா நிறுவனம் 14 சொந்த தொழிற்சாலைகள், 30 ஒப்பந்த தொழிற்சாலைகள் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் 500 கோடிரூபாய் செலவில் இத்தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

8 லட்சம் டன்

8 லட்சம் டன்

இந்நிறுவனம் வருடத்திற்கு 8 லட்சம் டன் உற்பத்தியை அளித்து வருகிறது, அதுமட்டும் அல்லாமல் மக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் 80,000 டன் உற்பத்தியை இந்நிறுவனம் உயர்த்தி வருகிறது.

இந்நிலையிலும் பிஸ்கேட் விற்பனையில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

பார்லே - பிரிட்டானியா

பார்லே - பிரிட்டானியா

விற்பனையில் பார்லே நிறுவனத்தை ஓரம்கட்டிய பிரிட்டானியா!விற்பனையில் பார்லே நிறுவனத்தை ஓரம்கட்டிய பிரிட்டானியா!

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Britannia plans two units in TN and Karnataka

Food company Britannia Industries Ltd. (BIL) is planning to set up two new units, one near Erode in Tamil Nadu and another near Bengaluru in Karnataka with an investment of Rs.250 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X