ஒரு தபால் அட்டைக்கு 7 ரூபாய் நஷ்டம்!.. கணக்குச் சொல்கிறது தபால் துறை...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தபால் அட்டைக்கு 7.03 ரூபாய், இன்லாந்து லெட்டருக்கு (உள்நாட்டு கடிதம்) 4.93 ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய தபால் துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

2013-14ஆம் நிதியாண்டில் இந்திய மக்கள் பயன்படுத்திய ஒவ்வொரு தபால் அட்டை மற்றும் இன்லாந்து லெட்டருக்கும் மத்திய தபால் துறை நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் புதன்கிழமை கூட்டத்தில் தெரிவித்தார்.

நஷ்டம்

நஷ்டம்

2013-14ஆம் ஆண்டின் நிதிநிலையின் படி ஒரு தபால் அட்டைக்கு 7.03 ரூபாயும், ஒரு இன்லாந்து லெட்டருக்கு 4.93 ரூபாயும் நஷ்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விநியோகம் அதிகரிப்பு

விநியோகம் அதிகரிப்பு

மேலும் 2011-12, 2012-13ஆம் ஆண்டுக் காலகத்தில் இன்லாந்து லெட்டர்களின் விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலை 2013-14ஆம் ஆண்டில் முற்றிலும் மாறியுள்ளதாகவும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதேபோன்ற நிலை தான் தபால் அட்டைக்கும் நிலவியது. 2013-14ஆம் நிதியாண்டில் இதன் அளவு 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்பீடு போஸ்ட்

ஸ்பீடு போஸ்ட்

அரசுப் பணிகள் மற்றும் முக்கியமான தேர்வுகளுக்கு நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அமைப்புகள் ஸ்பீடு போஸ்ட் சேவையைக் கட்டாயப்படுத்தியுள்ளதால், இச்சேவைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆயினும் 2012-13ஆம் ஆண்டுகளில் இதன் அளவு 17.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மை ஸ்டாம்ப்
 

மை ஸ்டாம்ப்

மேலும் தபால் துறையில் மை ஸ்டாம்ப் சேவையின் மூலம் தபால் துறை 18.16 லட்சம் ஸ்டாம்புகளை அச்சடித்து 4.57 கோடி ரூபாய் வருமானம் பெற்றது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மை ஸ்டாம்ப் சேவையில் தமிழ்நாடு தான் அதிகளவில் இத்துறைக்கு வருவாய் கொடுத்துள்ளது. இச்சேவையின் கீழ் தமிழ்நாட்டு மட்டும் 54.20 லட்சம் ரூபாய்க்கு ஸ்டாம்ப் அச்சடித்துள்ளது.

இதில் அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து ஆகியவை ஒரு பைசா கூடத் தரவில்லை.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt loses Rs 7 per post card, Rs 5 for inland letters

Department of posts incurred a loss of Rs 7.03 per post card and Rs 4.93 on every inland letter in 2013-14, Parliament was informed on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X