குர்கான்: உலகின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாகக் கருதப்படும் ஏர்டெல், இந்தியாவில் 296 நகரங்களில் தனது 4ஜி சேவையை வெற்றிகரமாக இன்று துவங்கியுள்ளது.
பல நகரங்களில் சோதனைகள் செய்தபின் ஏர்டெல் நிறுவனம் தனது சேவை இந்தியா முழுவதும் சுமார் 296 நகரங்களில் விரிவாக்கம் செய்யத்துள்ளத்தாக வியாழக்கிழமை அறிவித்தது.
4ஜி-யின் அத்தியாயம்
அமெரிக்க, சீனா, லண்டன் போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிவேக 4ஜி சேவை ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4ஜி சேவைக்கான புதிய அத்தியாயம் இந்தியாவில் துவங்க உள்ளது.
ஏர்டெல் 4ஜி
இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மொபைல் போன்களில் மட்டும் அல்லாமல், டாங்கிள், 4ஜி ஹாட்-ஸ்பாட் மற்றும் வை-பை டாங்கிள் ஆகியவற்றின் மூலமும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
கோபால் விட்டல்
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசிய பகுதிகளின், தலைவர் மற்றும் சீஈஓ-வான கோபால் விட்டல் கூறுகையில், சோதனை ஒட்டத்தில் சிறந்த முடிவுகள் மற்றும் தெளிவான சேவை கிடைத்துள்ளதால். 4ஜி சேவை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
போட்டி
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது 4ஜி சேவை அடுத்தச் சில மாதங்களில் துவங்க உள்ளது இதனால் இந்திய சந்தையில் இரு நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.
ரிலையன்ஸ் மொபைல்
மேலும் வாடிக்கையாளர்களைக் கவர ரிலையன்ஸ் ஜியோ தனது நிறுவனத்தின் பெயரிலேயே புதிய மொபைல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கும் போட்டியாக ஏர்டெல் 4ஜி சேவையைப் பயன்படுத்த கூடிய மொபைல் போன்களை வெறும் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்
இதனால் அடுத்த 5 வருடத்தில் அனைத்துத் தரப்பு மக்கள் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கும் எனத் தெரிகிறது. இது மிகப்பெரிய வளர்ச்சி.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications