பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் புதன்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 6 சதவீத உயர்வைச் சந்தித்துச் சந்தை கணிப்புகளை உடைத்தது.
இதனால் இந்நிறுவன பங்குகள் நாஸ்டாக் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் 7 சதவீதம் வரை அதிகரித்தது.
வருவாய்
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 3.09 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 22.6 சதவீதமாகும்.
மொத்த லாபம்
மேலும் இக்காலகட்டத்தின் மொத்த லாப அளவு 13 சதவீதம் உயர்ந்து 420.1 மில்லியன் டாலராக உள்ளது.
இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 3.03 பில்லியன் டாலராக இருக்கும் எனச் சந்தை கணிப்புகள் தெரிவித்திருந்தது. ஆனால் சிடிஎஸ் நிறுவனம் கணிப்புகளுக்கும் அதிகமான வருவாயைப் பெற்றுள்ளது.
பிற நிறுவனங்கள்
சிடிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனங்களின் வருவாய் அளவை ஒப்பிடும்போது, சந்தையில் இந்நிறுவனம் சூப்பர் ஸ்டாராக உள்ளது. டிசிஎஸ் 3.5% உயர்வு, இன்போசிஸ் 4.5% உயர்வு, விப்ரோ 1.1% உயர்வு, ஹெச்சிஎல் 3.2% உயர்வு.
முக்கியத் துறைகள்
சிடிஎஸ் நிறுவனம் இந்த 3 மாத காலத்தில் வங்கி மற்றும் நிதி சேவை, ஹெல்த்கேர் ஆகிய துறைகளில் ஆதிகளவிலான வருவாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் வெளியேற்றம்
இந்திய நிறுவனங்களில் நிலவுவது போலவே சிடிஎஸ் நிறுவனத்திலும் பணியாளர்கள் வெளியேற்ற அளவு 19 சதவீதமாக உள்ளது.
ஊதிய உயர்வு
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications