பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், பல லட்சம் வகையான பொருட்களை விற்று வரும் நிலையில், தற்போது புதிதாக வீட்டுப் பொருட்கள் பிரிவில் மரச்சாமான்களையும் (பர்னிச்சர்கள்) விற்கத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் தன் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் மற்றும் துறைவாரியான அர்பன் லேடர் மற்றும் பெப்பர்பிரை போன்ற நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் போட்டி போட துவங்கியுள்ளது.
இப்புதிய பிரிவில் பிளிப்கார்ட் துவக்க நாளிலேயே 10,000 பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது, இதன் மதிப்பு 2,000 ரூபாயில் இருந்து 1,50,000 ரூபாய் வரையில் உள்ளது.

இப்புதிய பிரிவு இல்லத்து அரசிகளுக்கும், புதிதாக வீடு வங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், சிறு அலுவலக நிறுவனங்களைக் குறிவைத்துப் பிளிப்கார்ட் துவங்கியுள்ளது.
பர்னிச்சர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கப் பிளிப்கார்ட் நிறுவனம் பல புதிய மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications