பெங்களூரு: ஐயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் அக்சன்சர் நிறுவனத்தின், இந்திய கிளையின் தலைவராக ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவினாஷ் விஷிஸ்தா கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், இவர் பொறுப்பில் ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக அனின்தியா பாசு அவர்களையும் அக்சன்சர் நிர்வாகம் நியமித்துள்ளது. இருவர்களின் பணியும் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இப்புதிய பொறுப்புகளில் அனின்தியா பாசு அக்சன்சர் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் பணியில் செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்சன்சர் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவராக இருந்த ரேகா மேனன் தற்போது இந்திய கிளைகளில் தலைவராகப் பதவி உயர்வு அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications