மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் நோக்கத்தில் பிரத்தியேகமாக ஏர்டெல் சப்ரைசர்ஸ் என்னும் புதிய திட்டத்தைச் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் படி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் கட்டணத்தில் 30 சதவீத சலுகையை அளிக்கிறது.
அதுமட்டும் அல்லாமல் இவர்களுக்கான இணைப்பில் அதிவேக இண்டர்நெட் மற்றும் கூடுதல் டேட்டாவும் அளிக்க உள்ளதாக ஏட்டெல் தெரிவித்துள்ளது.
அசோக் கணபதி
'ஏர்டெல் சப்ரைசர்ஸ்' திட்டம் குறித்து இந்நிறுவனத்தின் ஹப் தலைமை நிர்வாக ஆதிகாரியான அசோ கணபதி கூறுகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாகவே 'ஏர்டெல் சப்ரைசர்ஸ்' அறிமுகப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா
சமீபத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் இலவச வாய்ஸ் கால் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இத்திட்டம் சந்தையில் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனுடன் இலவச Anti Virus மென்பொருள் மற்றும் வை-பை ரவுட்டர் ஆகிய சேவைகளையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது.
பழைய வாடிக்கையாளர்
இந்நிலையில் பழைய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து நிறுவனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளக் கூடுதல் டேட்டா அல்லது வேகமான சேவையை அளிக்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏர்டெல்
1990களில் முதல் முறையாக இந்தியாவில் பிராடுபேண்ட் சேவையை அறிமுகப்படுத்திய ஏர்டெல், தற்போது முதல் முறையாக அதிவேக மொபைல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
4ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தனது சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் சுமார் 296 நகரங்களில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications