சுந்தர் பிச்சை தலைமையில் இந்தியர்கள் கையில் 'கூகிள்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலகின் மிகப்பெரிய இண்டர்நெட் தேடுதல் நிறுவனமான கூகுள், தனது தேடுதல் அல்லாத முக்கியச் சேவைகளைத் தனியாகப் பிரித்துப் புதிதாக ஆல்பபெட் என்னும் நிறுவனத்தைத் துவங்கப்பட்டது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்குச் புதிய சீஇஓ-வாகத் தமிழரான சுந்தர் பிச்சை சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

 

<strong><em>(உங்களுக்கு இது கூட தெரியாதா.. வங்கியில் பயன்படுத்தும் சில முக்கிய சொற்கள்..!)</em></strong>(உங்களுக்கு இது கூட தெரியாதா.. வங்கியில் பயன்படுத்தும் சில முக்கிய சொற்கள்..!)

கூகிள் நிறுவனத்தில் இருந்து ஆல்பபெட் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மட்டும் அல்லாமல் ஆதிக்கம் நிறைய பல உயர் பதவிகளில் இந்தியர்களின் அதிகமானோர் உள்ளனர்.

<strong><em>(ஸ்மார்ட் சிட்டிகளின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?)</em></strong>(ஸ்மார்ட் சிட்டிகளின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?)

அவர்கள் யார் அவர்கள் வகிக்கும் பதவிகளை பற்றி இப்போது பார்ப்போமா..

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாடெல்லா நியமனத்திற்குப் பின் உலகின் முன்னணி நாடுகள் மத்தியில் இந்தியர்களின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் சீஇஓ-வாகச் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டது.

இந்தியாவிற்கு மேலும் ஒரு மணிமகுடம் என்றே கூறலாம். சரி வாங்க நம்ம இந்தியர்களின் ஆதிக்கத்தைப் பார்ப்போம்.

 

இந்தியர்கள்

இந்தியர்கள்

கூகுள் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரிந்த ஆல்பபெட் நிறுவனத்தின் உயர் பதவிகளில் சுந்தர் பிச்சை மட்டும் அல்லாமல் பல இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகமானோர் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. (கூகுள் நிறுவனத்தில் மட்டும் அல்ல நாசா, மைக்ரோசாப்ட் உட்பட, இன்று உலகின் முன்னணி நிறுவனங்கள் எனக் கூறப்படும் அனைத்து நிறுவனங்களிலும் இந்தியர்கள் கணிசமாக உள்ளனர்)

 

அமித் சிங்காள்
 

அமித் சிங்காள்

கூகுள் நிறுவனத்தின் முக்கியச் சேவையான தேடுதல் (Search) பிரிவின் தலைவராக உள்ளார் அமித் சிங்காள். மேலும் இந்நிறுனத்தின் உயர் துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

2000ஆம் ஆண்டில் ஏடி & டி நிறுவனத்தில் தனது பணியை விடுத்து கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

 

ஸ்ரீதர் ராமசுவாமி

ஸ்ரீதர் ராமசுவாமி

கூகுள் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் வர்த்தகப் பிரிவின் உயர் துணை தலைவராக உள்ளார். இண்டர்நெட் விளம்பர உலகில் மிக முக்கிய நபராகவும் ஸ்ரீதர் ராமசுவாமி கருதப்படுகிறார்.

சஞ்சய் கிமாவாத்

சஞ்சய் கிமாவாத்

இண்டர்நெட் உலகில் புதுமைகளை உருவாக்கியவர்கள் பெயர்களில் வெளிவராத பட்டியல் என்று ஒன்று இருந்தால் அதில் முதல் பெயர் சஞ்சய் கிமாவாத் அவர்களின் பெயர் தான்.

இவர் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். சரி அப்படி என்ன சாதித்தார் என்றால், இன்றைய தொழில்நுட்ப உலகில் கலக்கிக்கொண்டு இருக்கும் பிக் டேட்டா-வில் முக்கியச் சிறப்பான மேப்ரெடியுஸ் என்னும் செயல்முறையை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார் சஞ்சய் கிமாவாத்.

 

மனிக் குப்தா

மனிக் குப்தா

இவர் கூகுள் நிறுவனத்தின் பிராடெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரா உள்ளார். அதுமட்டும் அல்லாமல் கூகுள் மேப்ஸ் பரிவின் தலைவராகவும் உள்ளார். சுமார் 7 வருடமாகக் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அபர்னா சென்னபிரகதா

அபர்னா சென்னபிரகதா

கூகுள் நவ் என்னும் பிரிவின் பிராடெக்ட் மற்றும் என்ஜினீயரிங் பிரிவின் தலைவராக உள்ளார் அபர்னா சென்னபிரகதா.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian-origin executives who rose to the top at Alphabet

Here are some of the other Indian-origin executives who have risen to the top at the biggest unit of newlycreated holding company Alphabet.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X