டெல்லி: மஹிந்திரா குழுமம் ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாரங்கள் தயாரிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனது இரு சக்கர வாகன வர்த்தகத்தில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இம்முதலீட்டைக் கொண்டு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், சந்தையின் முன்னணி நிறுவனங்களுக்குப் போடியாக விளங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன மற்றும் விவசாய உபகரணங்கள் பிரிவின் தலைவர் ராஜேஷ் ஜெஜூரிகார் கூறுகையில் இருசக்கர வாகன விற்பனை சந்தையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்டுள்ளோம், மேலும் எங்களது சந்தையை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.

மேலும் இந்த 500 கோடி முதலீட்டில் 75 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகன விற்பனையில் 7 வருடமாக இந்திய சந்தையில் இயங்கி வரும் இந்நிறுவனம் 1 -2% சந்தையை மட்டுமே கைபற்றியுள்ளது. இதுவரை இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications