சம்பளத்திற்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யும் மத்திய அரசு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாக மட்டும் வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் செலவு செய்யப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்படுவதால், அரசின் செலவீணம் அதிகரிக்க உள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பளத்திற்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யும் மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் 1,00,619 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 9.56 சதவீதம் அதிமாகும்.

2016-17ஆம் நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால் மத்திய அரசின் செலவீனம் 15.79 சதவீதம் அதிகரித்து 1.16 கோடியாக உயர உள்ளதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பளத்திற்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யும் மத்திய அரசு!

இதன் மூலம் ஓய்வுதிய செலவீனமும் 1.02 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

7வது சம்பள கமிஷன் பிப்ரவரி 2014ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salaries of central govt staff to exceed Rs. 1 lakh cr in FY 16

Central government's salary expenditure will exceed Rs. 1 lakh crore in the current fiscal and is projected to increase further with the recommendations of 7th Pay Commission, posing risk to public finances, Finance Ministry said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X