டெல்லி: இந்திய சந்தையில் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், 1 கோடி ஆக்டிவா வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக இன்று மகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா
ஹோண்டா ஆக்டிவா வாகனம் 4 ஸ்டோர்க் இன்ஜின் மற்றும் கியர் லெஸ் ஆகிய 2 வடிவங்களில் இந்தியாவில் முதல் முறையாக 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வருடத்திலேயே இதன் விற்பனை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
1 கோடி வாகனங்கள்
இந்த விற்பனைக் குறித்து இந்நிறுவனத்தின் சீஇஓ கெய்டா முராமாட்சு கூறுகையில், இந்தியாவில் எங்களது விற்பனையின் மூலம் 1 கோடி குடும்பங்களை மகிழ்வித்துள்ளோம் என்பதில் பெருமிதம் அடைகிறேன் என்று தெரிவித்தார்.
ஸ்கூட்டர் விற்பனை
2001ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா அறிமுகத்தின் மூலம் மீண்டும் ஸ்கூட்டர் விற்பனை வெற்றிகரமாகத் துவங்கியது. இதன் வெற்றிக்குப் பின் சந்தையின் பிற நிறுவனங்களும் தனது தயாரிப்பையும், விற்பனையும் துவங்கியது.
21 லட்ச வாகனங்கள்
அறிமுகம் செய்யப்பட்ட முதல் வருடத்திலேயே இதன் விற்பனை அளவு 55,000ஆக எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் ஆக்டிவா வாகன விற்பனையின் அளவு 21 லட்சமாக இருந்தாக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் யாத்விந்தர் சிங் தெரிவித்தார்.
டாப் 10 மலையாள பணக்காரர்கள்!
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications