பன்னாட்டு முதலாளிகளின் ஆதிக்கத்தில் இந்திய நிறுவனங்கள்!

டெல்லி: ஈகாமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்னாப்டீல், பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இம்முதலீட்டுக் குறித்து ஆகஸ்ட் மாதம் முதலே செய்திகள் வெளிவரத் துவங்கினாலும் ஸ்னாப்டீல் எந்தவிதமான பதில்களும் அளிக்கவில்லை.

500 மில்லியன் டாலர்

500 மில்லியன் டாலர்

சீனா, ஜப்பான், தைவான் நாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் ஆர்வம் காட்டி ஸ்னாப்டீல் நிறுவனத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இத்தகைய முதலீட்டைக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களின் மூலம் தங்களது தயாரிப்பை எளிதாக விற்பனை செய்ய முடியும். இதனால் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பதே உண்மை.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இதன் காரணமாகத் தான் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மறுத்து வந்தது. ஆனால் பன்னாட்டு முதலாளிகள் தங்களுக்கே உரிய பாணியில் இந்திய சந்தையைக் கைபற்றி வருகின்றனர்.

பாக்ஸ்கான்

பாக்ஸ்கான்

தைவான் நாட்டின் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் நேரடியாக 150 மில்லியன் டாலரும், ஈபே நிறுவனத்திடம் இருந்து 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளையும் பாக்ஸ்கான் தற்போது கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் ஈபே இன்க் நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்த தனது பங்கு இருப்பைக் குறைத்துள்ளது

 

அலிபாபா

அலிபாபா

சீன ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா ஆகிய நிறுவனங்கள் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் நேரடியாக முதலீடு செய்துள்ளது.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

மேலும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பாங்க், பிளாக்ராக் மற்றும் டிமாசெக் ஆகியவை இணைந்து ஸ்னாப்டீல் நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க மேலும் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாஸ்பர் இன்போடெக்

ஜாஸ்பர் இன்போடெக்

இதனால் ஸ்னாப்டீல் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஜாஸ்பர் இன்போடெக் நிறுவனத்திற்குப் புதிதாக 500 மில்லியன் டாலர் முதலீடு கிடைத்துள்ளது மட்டும் அல்லாமல் இதன் மதிப்பு 4.7 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இருந்து 5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பங்குகள்

பங்குகள்

கடந்த வருடம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளுக்காக ஜப்பான் சாப்ட்பாங்க் 627 கோடி ரூபாய் முதலீடு செய்தது, தற்போது செய்துள்ள 100 மில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டிற்கு இந்நிறுவனம் 2 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.

அலிபாபா மற்றும் பாக்ஸ்கான்

அலிபாபா மற்றும் பாக்ஸ்கான்

இந்நிலையில் அலிபாபா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் 200 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு இரு நிறுவனங்களும் தலா 4 சதவீத பங்குகளைப் பெறுகிறது.

மதிப்பீடு

மதிப்பீடு

இந்த முதலீட்டின் போது ஸ்னாப்டீல் நிறுவனம் 5-6 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

கடந்த சில நாட்டுகளுக்கு முன்னர்ப் பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 700 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டி இந்நிறுவன மதிப்பீடு 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமேசான்

அமேசான்

மேலும் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் 5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்திய சந்தையில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய திட்டங்கள் மற்றும் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருவதால், அடுத்த 2 வருடத்தில் இத்துறையின் வர்த்தக அளவு 3 மடங்கு வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+