சென்னை: கடந்த சில வருடங்களாக எங்குத் திரும்பினாலும் நாம் காதில் விழுவது ஆன்லைன் ஷாப்பிங், ஈகாமர்ஸ், ஆன்லைன் பேமெண்ட் போன்றவை தான். இந்நிலை இந்தியாவில் மட்டும் தானா என்று பார்த்தால் அது இல்லை.. உலகம் முழுவதிலும் இதே நிலைதான் சொல்லப்போனால் இந்தியாவில் இது தாமதமான நிகழ்வு என்றே கூறவேண்டும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் ஈகாமர்ஸ் துறை சிறந்து விளங்கும் இத்திருணத்தில் இத்துறை 30 நொடிகளில் 1.2 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெறுவதாக டெலாய்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 நிமிடத்தில்... 1560 கோடி ரூபாய்...
உலகளவில் ஈகாமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்துறையில் வர்த்தக அளவுகள் பற்றிச் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் ஆஃப் இந்தியா உடன் இணைந்து டெலாய்ட் நிறுவனம் ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது.
ஒரு நிமிடத்திற்கு ஈகாமர்ஸ் துறை 1,560 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
சமுக வலைத்தளங்கள்
மேலும் இத்துறை வளர்ச்சிக்கு பேஸ்புக், பின்இன்டரஸ்ட் மற்றும் டிவிட்டர் ஆகியவை அதிகளவில் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதில் பேஸ்புக் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகம்.
கூட்டணி
மேலும் உலகளவில் ஈகாமர்ஸ் மற்றும் சமுக வலைத்தளங்கள் இணைந்து தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த பல வகையான திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் இத்துறை வர்த்தகத்தில் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் பங்கு மிகவும் அதிகம்.
பிளிப்கார்ட் மற்றும் பேஸ்புக்
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் பேஸ்புக் நிறுவனத்திடம் இணைந்து தனது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சமுக வளத்தளங்களில் மக்கள் அதிகளவில் தங்களது பொன்னான நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனைப் பயன்படுத்திப் பேஸ்புக், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதிக வர்த்தகத்தைப் பெறுகின்றனர்.
ரேடிங் மற்றும் ரிவியூ
மேலும் ஈகாமர்ஸ் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கை ஊட்டும் பகுதியாக ரேடிங் மற்றும் ரிவியூ உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இத்துறை நிறுவனங்கள், 11 பேர் கொண்டு குழுவை அமைத்து ஒவ்வொரு பொருட்களும் பொய்யான ரேடிங் மற்றும் ரிவியூ அளித்து வருவதால் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
வசதிகள்
அதுமட்டும் அல்லாமல் அதிக விலை உடையப் பொருட்களை மாத தவணை திட்ட வசதி அளிப்பதால் அதிக தொகை கொண்ட பொருட்களும் கூடச் சந்தையில் சிறப்பாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications