பெங்களூரு: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்து 880 மில்லியனாக உள்ளது.
இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களின் முதலீடு அதிகரித்து இச்சந்தையின் மதிப்பு 21.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகக் கார்ட்னர் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ஆம் நிதியாண்டின் மொபைல் டேட்டா சேவையில் முதலீடு அளவு 15 சதவீதம் அதிகரித்து 6.5 மில்லியன் டாலரை அடையும் எனவும், டெலிகாம் நிறுவனங்கள் டேப்லெட், நோட்புக்ஸ் போன்று நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சேவைகள் அளிக்கத் துவங்கும் எனவும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மொபைல் டேட்டா சேவையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், அதிலும் டேட்டா சேவையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துள்ளதாகவும் டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications