மும்பை: இந்திய மக்கள் அனைவருக்கும் நிதிச்சேவை கொண்டு சேர்க்கும் இலக்குடன், பேமெண்ட் வங்கிச் சேவைகளை அளிப்பிற்காக 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தீவிர ஆய்விற்குப் பின் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் இந்த 11 நிறுவனங்கள், வங்கிகளில் அளிக்கப்படுவது போலவே டெப்பாசிட் போன்ற பல நிதி சேவைகளை அளிக்க உள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 11 நிறுவனங்கள் பெயர் கொண்ட பட்டியல்களில், வோடாபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நாட்டின் 2 முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பேமெண்ட் வங்கியை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
சரி பேமெண்ட் வங்கி அப்படினா என்ன? அட பொருமையா 5 ஸ்லைடரை பாருங்க பாஸ் புரியும்...
பெரு நிறுவனங்கள்
மேலும் நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களாகக் கருதப்படும் ரிலையன்ஸ் மற்றும் ஆதித்தியா பிர்லா நுவோ ஆகிய நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது.
பேடிஎம் மற்றும் சன் பார்மா
மேலும் தனிநபர்கள் அடிப்படையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்கவி ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வங்கிகள் அல்லாத நிறுவனமான சோழமண்டலம் விநியோக சேவை நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்பு
ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கப்பட்ட 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பட்டியலில் இந்திய தபால் துறை, பினோ பேடெக், டெக் மஹிந்திரா மற்றும் நேஷ்னல் செக்குரிட்டிஸ் டெப்பாசிடரி லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
பேமெண்ட் வங்கி
பேமெண்ட் வங்கியில் பிற வங்கிகளில் அளிப்பது போலவே சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் திறக்கப்படும், டெபிட் கார்டு உண்டு, கிரேடிட் கார்டு இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள் என்பதால் வங்கிகளுக்கு இணையாகவோ அல்லது சில சதவீதம் அதிகமாகக் கூட வட்டியை அளிக்க வாய்ப்புண்டு.
1 இலட்சம் ரூபாய் வரை சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். மேலும் முக்கியமாகப் பேமெண்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்காது.
41 நிறுவனங்கள்
இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளை அமைக்க 41 நிறுவனகங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்திருந்தது. தீவிர ஆய்விற்குப் பிறகு 11 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications