சென்னையில் இயங்கி வரும் ரெனால்ட் - நிசான் உற்பத்தி ஆலையில் சுமார் 3,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ய இத்தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானின் நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடத்திவரும் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையில் 3,000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இவ்விதம் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ள பணியாளர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், அப்ரன்டிஸ் மற்றும் பழகுநர்களாகப் பணிபுரியும் பணியாளர்கள் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக ரெனால்ட் நிசான் நிர்வாகத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பொதுவாக இந்திய சந்தை வளர்ந்து வரும் சந்தையாகும். சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்க நிலைக்கேற்ப நிலை திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது எனப் பதில் அளித்துள்ளது.
இந்த உற்பத்தி ஆலையில் இன்றைய நிலையில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


Click it and Unblock the Notifications