டெல்லி: காமடிட்டி சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
இந்திய சமையல் அறைகளில் அனைத்து உணவுகளும் சுவை சேர்க்கும் வெங்காயம், கடந்த இரு வாரங்களாகக் கசப்பை சேர்த்து வருகிறது. மேலும் நடப்பு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயரும் எனக் கணிப்புகள் தெரிவிக்கிறது.
இதனால் வெங்காயத்தை உரிக்காமலேயே மக்கள் கண்களில் கண்ணீர் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மொத்த விலை விற்பனை
இதுவரை மொத்த விலை விற்பனை சந்தையில் அதிகபட்சமாக வெங்காயத்தின் விலை 55 ரூபாயாக (செப்டம்பர் 2013) இருந்த நிலையில், திங்கட்கிழமை இதன் விலை 57 ரூபாயாக உயர்ந்துள்ளது.
1 கிலோ 100 ரூபாய்..
கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலை 55 ரூபாயாக இருந்த போது, சில்லறை வர்த்தகத்தில் இதன் விலை 100 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதி வரை வெங்காயத்தின் விலை குறை வாய்ப்பில்லை எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
விவசாயம்..
இந்தியாவில் இருந்து உற்பத்தி குறைந்ததால், வெங்காயத்தின் விலை 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் உற்பத்தி அதிகரிக்க அடுத்த அறுவடை வரை காத்திருக்கும் வேண்டும்
இறக்குமதி
இப்பிரச்சனையைக் களைய ஓரே வழி, மத்திய அரசு மிகப்பெரிய அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்வது தான். இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை செய்ய வருவதாகச் செய்திகள் வந்தாலும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
10,000 டன் வெங்காயம்...
இந்தியாவில் வெங்காயப் பற்றாக்குறையைக் களைய மத்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமான MMTC அமைப்பு சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 10,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக டெண்டர் அறிவித்துள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications