வருமான வரி வசூலில் கர்நாடகா, கோவா அலுவலகம் முன்னிலை!
பெங்களுரூ: 2015-16ஆம் ஆண்டு வருமான வரி வசூலில் கோவா மற்றும் கர்நாடகா வருவாய் வரித்துறை சுமார் 82,000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இது 17 சதவீதம் அதிகமாகும். 2014-15ஆம் நிதியாண்டில் இதன் அளவு வெறும் 70,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை, டெல்லி வருமான வரித்துறைக்கு அடுத்தபடியாகக் கர்நாடகா, கோவா வருமான வரித்துறை அதிகளவில் வசூல் செய்யும் இடங்களைப் பிடித்துள்ளது.

2013-14ஆம் நிதியாண்டில் மத்திய வருமான வரித்துறைத்துறை 20 லட்சம் விண்ணப்பதார்களிடம் இருந்து 17.7 லட்சம் ரூபாய் வருமான வரியைப் பெற்றது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தங்களது வருமான வரியைக் கணக்கிட்டு செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications