மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கம் முதல் மந்தமான வர்த்தக்தை பதிவு செய்தாலும், அதிகளவிலான சரிவு காணப்படவில்லை.
ஆனால் மதியம் 1.30 மணிக்கு முதல் ஆசிய சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்கப்பட்டதால், மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் முடியும் நேரத்தில் 109.29 புள்ளிகள் சரிந்து 26,283 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டி குறியீடும் இன்று 30.65 புள்ளிகள் சரிவுடன் 7,971.0 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் செப்டம்பர் மாத அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால் மும்பை பங்குச்சந்சை வர்த்தகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பங்கு இருப்பை அதிகளவில் குறைத்து வருகின்றனர்.

இதனால் நாணய பரிமாற்றச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் விலை 30 பைசா குறைந்து 66.44 ரூபாயாகச் சரிந்துள்ளது உள்ளது. மேலும் தொடர்ந்து டாலர் மதிப்பு உயரும் வண்ணமாகவே உள்ளது.
டாலர் மதிப்பு அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான பங்கு விற்பனை ஆகியவை இந்திய சந்தையை இன்றைய வர்த்தக முடிவில் அதிகளவில் பாதித்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. வங்கித்துறை பங்குகள் கணிசமான சரிவுகளைச் சந்தித்தது.
மேலும் இன்று மாலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை வெளியிடப்படுவதாலும் சந்தையில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications