டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணியில் தநிதியமைச்சகத்தின் புதிய குழு இறங்கியுள்ளது.
நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்குழு சக்திகாந்த தாஸ் மற்றும் ஆதியா ஆகியோரின் தலைமையில் இயங்க உள்ளது. 2015-16ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் நாட்டின் ஜிடிபி அளவு 7% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த வருடம் முதல் காலாண்டில் அதன் அளவு 6.7% என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய குழுவில் இடம்பெற்றுள்ள சக்திகாந்த தாஸ் பொருளாதார விவகார துறையின் செயலாளராக உள்ளர், ஆதியா நிதியியல் சேவைகள் பிரிவின் தலைவராக உள்ளார்.
இன்று சக்திகாந்த தாஸ் வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன் அவர் விவசாய உரங்கள் பிரிவின் செயலாளராக இயங்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பல திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கை இந்தியா பொருளாதாரத்தை அமெரிக்கா, சீனா அடுத்து உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 3வது இடத்தைப் பிடிக்க உதவும்.
இந்நிலையில் மத்திய அரசு வழக்கம் போல் பட்ஜெட் அறிக்கையைப் பிப்ரவரி கடைசி வேலை நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications