ஜிடிபி தாக்கத்தால் சென்செக்ஸ் குறியீடு 590 புள்ளிகள் சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: திங்கட்கிழமை மாலை மத்திய அரசு 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி அறிக்கையை வெளியிட்டது. சந்தைக் கணிப்புகளை விடவும் குறைவாக 7 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்ட ஜிடிபி, செவ்வாய்க்கிழமை வர்த்தகச் சந்தையைப் பதம் பார்த்துவிட்டது.

 

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 109 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 586.65 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இதனால் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இன்று அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.

பன்னாட்டு முதலீட்டாளர்கள்

பன்னாட்டு முதலீட்டாளர்கள்

இன்றைய வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள், முதல் காலாண்டின் 7 சதவீத ஜிடிபி அளவுகளைக் கருத்தில் கொண்டு அமெரிக்கப் பெட்ரல் வங்கியின் வட்டி உயர்விற்கு ஏதுவாக அதிகளவிலான இந்திய பங்குகளை விற்றனர். குறிப்பாக ஜப்பான் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர் அதிகம்.

சென்செக்ஸ் நிஃப்டி

சென்செக்ஸ் நிஃப்டி

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 586.65 புள்ளிகள் (2.23%) சரிந்து 25,696.44 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடும் இன்றும் 185.45 புள்ளிகள் சரிந்து 7,785 புள்ளிகளை எட்டியது.

அமெரிக்க டாலர்
 

அமெரிக்க டாலர்

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 பைசா சரிந்து 66.36 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை

நாணய சந்தை வர்த்தகத்தில் இன்று மாற்றம் இல்லாமல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 2,688 ரூபாய்க்கும் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2,513 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 35,225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Slumps Over 590 Points on Weak GDP, Global Selloff

Indian stock markets are on course for a big down day, with the BSE Sensex and Nifty indices falling over 2.5 per cent in late trading. The BSE Sensex fell over 589 points, while the Nifty slumped below the key 7,750 levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X