பெட்ரோல், டீசல் விலை குறைவால் வாகன விற்பனை அதிகரிப்பு!

சென்னை: 2015ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் குறைவான வட்டி வகிதம் மற்றும் எரிபொருள் விலை குறைவாக உள்ளதால் இந்திய சந்தையில் கார் மற்றும் இருசக்கர வாகனகளின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று லாபத்தைச் சந்தித்துள்ளது.

ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 59% அதிகரித்துள்ளது. மொத்தம் 42,360 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 26,643 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

சுஸுகி மோட்டார்ஸ்

சுஸுகி மோட்டார்ஸ்

இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 36,636 மோட்டார் சைக்கிளை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 21,862 ஆக இருந்தது.

டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ்

இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 2,27,653 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 2,25,064 ஆக இருந்தது.

ஹோண்டா மோட்டார்ஸ்

ஹோண்டா மோட்டார்ஸ்

இந்நிறுவனத்தின் விற்பனை 1.86 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3,95,262 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 3,88,016 ஆக இருந்தது.

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவன வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 12,547 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 1.29 சதவீதம் அதிகரித்துள்ள மொத்தம் 35,634 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மாருதி

மாருதி

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,17,864 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகளின் உள்நாட்டு விற்பனை 8.6 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 1,06,781 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 98,304 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

 

 

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 54,608 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 48,111 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+