மும்பை: 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய நிதியமைச்சகம் தற்போது குஜராத் உட்பட அனைத்து மாநிலங்களுக்குச் செப்டம்பர் 7ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை கால நீட்டிப்பு செய்த நிதியமைச்சகம் தற்போது மீண்டும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்யாத மக்கள் கவனமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் வருமான விரியைத் தாக்கல் செய்யவும்.

கடந்த மே 2015ஆம் மாதம் நிதியமைச்சகம் 3 பக்கம் புதிய வருமான வரி தாக்கல் படிவத்தை அறிமுகப்படுத்தியது, இதில் விண்ணப்பதாரின் அயல்நாட்டுப் பயணம் மற்றும் செயற்படாத வங்கிக் கணக்குகள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால நிட்டிப்புச் செய்வதாக அறிவித்தது.
அதேபோல் மேலும் ITR 2 மற்றும் ITR 2A படிவங்களையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தின் இட ஒதுக்கீடு கேட்டு பட்டேல் சமுகத்தின் செய்யும் போராட்டத்தின் காரணமாக இம்மாநில மக்களுக்கு ஆதரவாக நிதியமைக்கம் வருமான வரி தாக்கல் செய்யச் செப்டம்பர் 7ஆம் தேதி வரை காலநீட்டிப்பு அறிவித்தது.
இதன் பின் இக்கால நீட்டிப்பு அறிவிப்பை அனைத்து மாநிலங்களுக்கும் நிதியமைச்சகம் அமலாக்கம் செய்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி வசூலில் நேரடி வரியாக நிதியமைச்சகம் 7.98 லட்சம் கோடி வரை வசூல் செய்ய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications