மும்பை: சர்வதேச சந்தைகளின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் 7% ஜிடிபி அளவுகள் இந்திய பங்குச்சந்தையைக் கடந்த 3 நாட்களாகப் பாதித்து வருகிறது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 242.88 புள்ளிகள் சரிந்து 25,453 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 68.85 புள்ளிகள் சரிவில் 7,717.00 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மின்சாரம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கியியல், மூலதன சந்தை மற்றும் நுகர்வோர் பொருட்களின் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் டெக் மஹிந்திரா, ஐடியா, டிசிஎஸ், அல்டராடெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் 2 சதவீதம் முதல் 5.2 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் பெல்,ஓன்ஜிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கிரைன் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைந்தது.


Click it and Unblock the Notifications