மும்பை: இந்திய பார்மா துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சிப்லா, அமெரிக்காவில் செயல்படும் இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை 3,630 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது.
அமெரிக்கச் சந்தையில் செயல்படும் இன்வாஜென் பார்மா இன்க் மற்றும் எக்ஸ்ஏலென் பார்மா இன்க் ஆகிய நிறுவனங்களைச் சிப்லா நிறுவனம் 550 மில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் வருடத்திற்கு 200 மில்லியன் டாலர் வரை வருவாய் அளிப்பதாகச் சிப்லா நிறுவனம் கைபற்றுதல் குறித்துத் தெரிவித்துள்ளது.
80 வருடம்...
கடந்த 80 வருட வர்த்தகத்தில் சிப்லா நிறுவனம் 2வது முறையாக நிறுவனத்தைக் கைபற்றியுள்ளது.
இந்த அமெரிக்க நிறுவனத்தைக் கைபற்றியதன் மூலம் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வர்த்தகம் அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வரிவாக்கம்..
இவ்விறு நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் சிப்லா, நரம்பு மண்டல பாதிப்பு, கார்டியோ வாஸ்குலர், எதிர்ப்புக் குறைகள் மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கான மருந்து விற்பனையை விரிவாக்கம் மற்றும் கூடுதல் மருந்து வகைகளைப் பட்டியலில் இணைத்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற உள்ளது.
அமெரிக்கச் சந்தை
ஏற்கனவே அமெரிக்கச் சந்தையில் இந்திய பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருவதால், சிப்லா நிறுவனத்தின் வருகை பிற நிறுவனங்களுக்குப் போட்டியை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பங்குச்சந்தை
500 புள்ளிகள் சரிவில் தத்தளிக்கும் மும்பை பங்குச் சந்தையில், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் சரிவு பாதையில் உள்ள போது, சிப்லா நிறுவனம் 0.10% உயர்வில் உள்ளது.


Click it and Unblock the Notifications