ஒரே நாளில் 563 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை!
மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 2 சதவீத சரிவை சந்தித்து 14 மாத சரிவை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் மந்தமான வர்த்தகம் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வை நிர்ணயம் செய்யும் யுஎஸ் ஜாப்ஸ் டேட்டோ அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 563 புள்ளிகள் வரை சரிந்து 25,201.90 புள்ளிகளை அடைந்ததுய அதிகளவிலான சரிவு சந்தித்தது.
மேலும் நிஃப்டி குறியீடும் இன்று 167.25 புள்ளிகள் சரிந்து 7,655.05 புள்ளிகள் எட்டியது குறிப்பிடதக்கது.
இதனால் சந்தையில் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான சரிவை சந்தித்து வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications