மும்பை: கடந்த சில மாதங்களாக இந்திய சந்சதை முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து புகார் வந்து வண்ணம் உள்ளன.
மேலும் இக்கள்ள நோட்டுகள் நடைமுறை புழக்கத்தில் மட்டும் அல்லாமல் வங்கி ஏ.டி.எம்.களிலும் கள்ள நோட்டுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகள் ஊடுருவல்
இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் மலேசியா, தாய்லாந்து மற்றும் ஒமன் நாடுகளை மையமாக வைத்துக்கொண்டு, இந்திய எல்லைகள், தென் ஆசிய எல்லைகள் மற்றும் வளைகுடா நாடுகளில் மூலம் இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் ஊடுருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.
பாகிஸ்தான்
இந்தியாவில் நிலவும் கள்ள நோட்டுப் புழக்கத்திற்குப் பாகிஸ்தான் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக தேசிய குற்றப் பிரிவு (NCRB) உறுதியளித்துள்ளது.
7 ரகசிய குறியீடுகள்
இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிதாக 7 ரகசிய குறியீடுகளுடன் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட முடிவு செய்துள்ளது. இதை ஆர்பிஐ கிளை அமைப்பான பார்திய நோட்டு முத்திரன் பிரைவேட் லிமிடெட் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு அச்சு மற்றும் அச்சகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடிவமைக்கிறது.
வரிசை எண்
ரூபாய் நோட்டுகளில் தற்போது வரிசை எண்கள் ஒரே சீரான அளவில் உள்ளது. புதிய ரூபாய் நோட்டில் இதில் மாற்றம் செய்யப்பட்டு எண்களின் உயரம் ஒரே சீராக இருக்காது.
மற்றங்கள்
மேலும் காந்தியின் பிம்பம், ரூபாய் நோட்டில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்ற எழுத்தில் மேடு பள்ளம் போன்றவை உள்படச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எளிமையாகக் கண்டறிய முடியும்...
இந்தப் புதிய ரகசிய குறியீடுகளை வங்கி ஊழியர்கள் மட்டுமின்றிச் சாதாரண மக்களும் தெரிந்து கொண்டு கள்ள நோட்டை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வருகிறது.
கள்ளப் பணம் மற்றும் கருப்புப் பணம்
புதிய நோட்டுக்கள் வந்ததும் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
இதன்மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படுவதுடன் கருப்பு பணமும் வெளியே கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் பாங்கி திட்டமிட்டுள்ளது.
3 கோடி கள்ள நோட்டுகள்
கடந்த 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் சிக்கிய 30,354,604 கள்ள நோட்டுகளில் குஜராத்தில் தான் அதிக அளவாக 8,747,820 கள்ள நோட்டு சிக்கியுள்ளது.
அடுத்து ஆந்திராவில் 5,437,600 கள்ள நோட்டுகளும், பஞ்சாபில் 3,249,000 கள்ள நோட்டுகளும், பஞ்சாப், அரியானாவில் 1,696,850 கள்ள நோட்டுகளும் சிக்கியுள்ளன.
சென்னையிலும் உண்டு...
சென்னையில் ரூ. 1000, ரூ. 500 கள்ள நோட்டுகள் நடமாடுவதை வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். வங்கியில் பிடிபட்ட கள்ள நோட்டுகளில் ஊழியர்கள் ‘‘செல்லாத நோட்டு'' என்று முத்திரை குத்தி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications