டெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான இகாமர்ஸ் துறை மக்கள் மத்தியில் அன்றாடும் பயன்படுத்தும் ஒரு தளமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இந்திய நகரங்களில் உள்ள மக்கள் குறைந்தது 45 சதவீதம் பேர் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனப் புள்ளி விபரங்கள் கூறுகிறது. இந்நிலையில் அடுத்த 5 வருடங்களில் சராசரியாக 35 சதவீதம் வளர்ச்சியில் இந்திய ஈகாமர்ஸ் துறை 100 பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுக்க உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இன்றைய நிலையில் இத்துறையின் மொத்த சந்தை மதிப்பு 17 பில்லியன் டாலர் ஆகும்.

மேலும் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளதால், வணிகக் கடைகள் மற்றும் மால்களில் மக்களின் வருகை குறைந்துள்ளது.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளில் சராசரியாக 25 சதவீதம் வர்த்தகம் குறைந்துள்ளது. இதனால் மால்களில் இருக்கும் கடைகளின் வாடகை அளவுகள் சுமார் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால்களில் 46 சதவீதமும், ங்கிலாந்தில் உள்ள ஷாப்பிங் மால்களில் 32 சதவீதம் வரையில் மக்கள் கூட்டும் குறைந்துள்ளதாக அசோசாம் அமைப்பின் பொதுச் செயலாளர் டிஎஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் 4 கோடி வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளனர், இந்த எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 6.5 கோடியாக உயரும் என அசோசாம் கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications