24,900 புள்ளிகளை அடைந்த சென்செக்ஸ்.. ரூ.66.86ஆகக் குறைந்தது ரூபாய் மதிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் அமெரிக்கா மற்றும் சீன சந்தைகளில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியின் காரணமாக இந்திய சந்தை இன்றும் சரிவு பாதையிலேயே இருந்தது.

 

திங்கட்கிழமை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 308 புள்ளிகள் வரை சரிந்து 14 மாத சரிவை எட்டியது.

டாலர் மற்றும் யுவான்

டாலர் மற்றும் யுவான்

சீன சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் குறைவான சரிவு நிலவியதால் முதலீட்டாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி இந்திய சந்தையில் இன்று யுவான் நாணயங்கள் அதிகளவில் விற்றனர். இதன் காரணமாக டாலர் மதிப்பு 36 பைசா உயர்ந்து ரூபாய் மதிப்பை பாதாளத்திற்குத் தள்ளியது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 பைசா சரிந்து 66.87 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இத்தகைய நிலைக்கு அமெரிக்காவின் ஜாப்ஸ் டேட்டா முக்கியக் காரணமாக அமைந்தது.

சீன சந்தை

சீன சந்தை

திங்கட்கிழமை வர்த்தகத்தில் நிலையான வர்த்தக்தை பெற்று வந்த ஷங்காய் காம்போசிட் குறியீடு, வர்த்தக முடிவில் 2.52 சதவீத சரிவை பதிவு செய்தது.

அன்னிய முதலீடு
 

அன்னிய முதலீடு

கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீட்டு அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் 4 நாட்களில் சுமார் 4,000 கோடி ரூபாய் வரையிலான அன்னிய முதலீட்டை இந்திய சந்தை இழந்துள்ளது.

மேலும் 30,000 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

வாரத்தின் முதல் வர்த்தகத்தில், நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் மள மளவெனச் சரிய துவங்கியது. இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 308.9 புள்ளிகள் வரை சரிந்து 24,893.81 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 96.25 புள்ளிகள் சரிந்து 7,558.80 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Slips below 25,000 to 14-Month Low Amid Rupee Tumble

Domestic stock markets, roiled by developments in China and the US, resumed their downward slide on Monday, with the BSE Sensex slipping below the psychological 25,000 mark for the first time since July 14, 2014.
Story first published: Monday, September 7, 2015, 15:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X