டெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் பணக்காரர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யப் பயன்படுத்தும் ஒரு வழி தான் பி-நோட்ஸ். ஹெய் நெட் வொர்த் தனிநபர்கள், பதிவு செய்யப்பட்ட அன்னிய முதலீட்டு நிறுவனத்தின் பெயரில் பி-நோட்ஸ் முறையைப் பயன்படுத்தி இந்திய சந்தையில் முதலீடு செய்வார்கள்.

இத்தகைய முதலீட்டு முறையின் மூலம் இந்திய சந்தைக்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு கிடைத்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் பி-நோட்ஸ் மீதான வரிப் பிரச்சனை பன்னாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் பாதித்தது. இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.
இதனால் ஜூலை மாத்தில் பி-நோட்ஸ் வாயிலான முதலீட்டு அளவு 2.72 கோடியாகக் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இதன் அளவு 2.75 கோடியாகவும், மே மாதத்தில் 2.85 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பி-நோட்ஸ் முறையைப் பயன்படுத்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெண்மையாக மாற்றி வருகிறார்கள் என மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தது. இதனைத் தடுக்கும் விதமான மத்திய இரட்டைப் பரிவர்த்தனை வரி விதிக்கத் திட்டமிட்டது.
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை இந்திய சந்தையில் இருந்து அதிகளவில் குறைத்துக் கொண்டதால் மத்திய அரசு வரி விதிப்பை ஒத்தி வைத்தது. இதன் காரணமாகவே இத்திட்டத்தின் கீழ் முதலீடு அளவு அதிகளவில் குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications