ரூபே கார்டு: தெரிந்ததும், தெரியாததும்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ரூபே கார்டு, இந்தச் சொல்லை பலர் எங்கோ கேட்டது போல் தோன்றும், பண அட்டைப் பரிவர்த்தனையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது தான் இந்த ரூபே கார்டு.

 

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் அமெரிக்க நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு தனது சொந்த முயற்சியில் ரூபே என்னும் உள்நாட்டுப் பணப் பரிவர்த்தனை அட்டை இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யோகமான சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது.

தரமான சேவை

தரமான சேவை

அடுத்தச் சில வருடங்களில் விசா மற்றும் மாஸ்டர் அட்டைகளை நீங்கள் பயன்படுத்துவதைப் போலவே ரூபே அட்டைகளையும் உங்களால் எளிமையாகவும் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் பயன்படுத்த முடியும் சூழல் உருவாகி உள்ளது.

தண் ஜன் யோஜனா

தண் ஜன் யோஜனா

பிரதமரின் தண் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்காளர்களுக்கு ரூபே அட்டையை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சிறு சதவீதம் ரூபே அட்டையை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு
 

இந்திய தயாரிப்பு

இந்தப் பணப் பரிவர்த்தனை அட்டை இந்திய தயாரிப்பு என்பதால் இப் பணஅட்டையைக் குறைந்த செலவில் பெற முடியும். இந்த அட்டையின் சேவைகளும் சிற்பாக உள்ளது.

அன்னிய நிறுவனங்களிடம் ஒரு சேவை பெறும்போது பெரும் தொகை செலவிடப்படுகிறது. ரூபே கார்டுகளைப் பயன்படுத்தும் போது பெரும் பகுதி பணம் சேமிக்கப்படுவதுடன் அன்னிய நிறுவனங்களுக்கு இணையான சேவையும் கிடைக்கிறது.

'ரூபே' என்றால் என்ன..?

'ரூபே' என்றால் என்ன..?

'ரூபே' என்பது ரூபாய் மற்றும் வழங்குதல் ('பே'மெண்ட்) என்ற இரு வார்த்தைகளின் கூட்டினால் கிடைக்கும் வார்த்தையாகும். ரூபே-வின் விஷவில் அடையாளங்கள் நவீனமாகவும் மற்றும் வேகமானதாகவும் உள்ளன.

விபத்துக் காப்பீட்டு

விபத்துக் காப்பீட்டு

இந்த அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எந்தவித கட்டணத்தையும் செலுத்தாமலேயே ரூ.1 இலட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டினைப் பெறுகிறார்.

நீல நிறம்

நீல நிறம்

'ரூபே' அட்டையை வைத்திருப்பவர்கள் அமைதியை உணருவார்கள் என்பதன் அடையாளமாகவே இந்த அட்டையிலுள்ள நீல நிறம் உள்ளது.

இண்டர்நெட் பாங்கிங்

இண்டர்நெட் பாங்கிங்

இணையவழி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் ஒரு தனித்தன்மையான ஷாப்பிங் அனுபவத்தையும் ரூபே அட்டையை வைத்திருப்பவர்கள் பெறுவார்கள். ரூபே அட்டையை அனைத்து ATM இயந்திரங்களிலும் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் விற்பனை புள்ளிகளிலும் பயன்படுத்த முடியும். மேலும், இணைய வழி பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.

கான்டெக்ட்லெஸ்

கான்டெக்ட்லெஸ்

புதுமையான பணப் பட்டுவாடாவிற்கான வாய்ப்புகளான தொடர்பில்லாத வழிநடத்துதல் (Contactless to facilitate) மற்றும் மின்னணு முறையில் சிறிய டிக்கெட் பேமண்ட்களின் செயல்வேகத்தை அதிகரித்தல் போன்றவற்றை நல்ல உறுதியுடன் ரூபே வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupay Card: 5 Smart Things To Know

RuPay card, which is a domestic card launched by the National Payments Corporation of India (NPCI) is committed towards development of customized product and service offerings for Indian consumers.
Story first published: Thursday, September 10, 2015, 13:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X