ஏர் இந்தியாவில் புதிய சேவை: 'ஃபிரீமியம் எகானமி கிளாஸ்'
டெல்லி: சர்வதேச சந்தைகளைக் காட்டிலும் இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வேகமாக வளர்ந்து வருகிறது.
இச்சந்தையில் குறைவான அளவிலான வர்த்தகத்தைப் பெற்று நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்தில் இயங்கும் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானப் போக்குவரத்தில் அதிகளவிலான வர்த்தம் மற்றும் வருமானத்தைப் பெற ஏர் இந்தியா தனிக் கேபின் இருக்கை சேவையை 'ஃபிரீமியம் எகானமி கிளாஸ்' என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் என நம்புகிறது.
தற்போதைய நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா உருவாக்கி விஸ்தாரா நிறுவனத்தின உள்நாட்டு விமானச் சேவையில் ஃப்ரீமியம் எகானமி சேவையை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications